சூலூர் அருகே கார் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்பிலான கார்கள் எரிந்து நாசம்

கோவை சூலூர் அருகே உள்ள ஜெய் கிருஷ்ணா மாருதி ஷோரூமில் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 10க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்து நாசமாகின. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



கோவை: கோவை சூலூர் அருகே உள்ள ஜெய் கிருஷ்ணா மாருதி ஷோரூம் அண்ட் சர்வீஸ் எனும் கார் விற்பனையகத்தில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.



இந்த தீ விபத்தில் 10க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாகின.



தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும், அக்கம் பக்கத்தில் உள்ள நிறுவனங்களில் பணிபுரிவோர் முதல் கட்டமாக தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தீயணைப்பு படை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.



தீ விபத்தின் போது, கட்டிடத்தின் மேல் கூரை இடிந்து விழுந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த பத்துக்கு மேற்பட்ட கார்கள் தீயில் கருகி சேதமடைந்தன. சுமார் ஒரு மணி நேரம் கடுமையாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்திற்குப் பிறகு, ஷோரூமுக்குள் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட கார்களை ஊழியர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...