பொள்ளாச்சி அருகே கோட்டூர் பேரூராட்சி கவுன்சில் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

பொள்ளாச்சி அருகே கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் திமுக பேரூராட்சித் தலைவரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் திமுக பேரூராட்சித் தலைவரை கண்டித்து திமுக கவுன்சிலர்களே வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டூர் பேரூராட்சியின் சாதாரண கூட்டம் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக சார்ந்த பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே, பேரூராட்சித் தலைவர் ராமகிருஷ்ணன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. அவர் தன்னிச்சையாக செயல்பட்டு ஊழல் செய்து வருவதாகவும், சரியான முறையில் வரவு செலவு கணக்குகளை காட்டுவதில்லை என்றும், பேரூராட்சிக்கு மக்கள் நல பணிகளுக்காக அரசு ஒதுக்கும் நிதியில் ஊழல் செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து, திமுக பேரூராட்சி வார்டு கவுன்சிலர்களே வெளிநடப்பு செய்தனர்.

இந்த சம்பவம் கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெளிநடப்பு செய்த திமுக வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணன் வரி என்ற பெயரில் அதிகமாக வசூல் செய்து குறைவாக கணக்கு காட்டுவதாகவும், அரசு வழங்கும் நிதியை முறைகேடாக பயன்படுத்தி ஊழல் செய்வதாகவும் குற்றம் சாட்டினர்.

மேலும், இது தொடர்பாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அதனால் பேரூராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியே கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததாகவும் திமுக வார்டு கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் உள்ளூர் அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...