வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் பேருந்து-இருசக்கர வாகனம் மோதல்: போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து. ஒருவர் காயம். அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் உள்ள கவர்கள் எஸ்டேட் பகுதியில் அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் ஒருவர் காலில் படுகாயம் அடைந்தார்.



பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை நோக்கி வந்த அரசு பேருந்தும், கேரளா மாநிலம் பெருந்தல்மண்ணு பகுதியில் இருந்து வால்பாறைக்கு சுற்றுலா வந்த இருசக்கர வாகனமும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



108 ஆம்புலன்ஸ் வாகனம் வந்து காயம் அடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றது. பின்னர் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காடம்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வால்பாறை காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தகுமார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியதாவது:

- வால்பாறை மலைப் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும்.

- மலைப்பகுதியில் மேலே வரும் வாகனத்திற்கு கீழே செல்லும் வாகனங்கள் வழிவிட்டு செல்ல வேண்டும்.

- மழை பெய்து வருவதால் இருசக்கர வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும்.

- கவர்கள், ஊமையாண்டி முடக்கு போன்ற பகுதிகளில் அதிக மேகமூட்டம் இருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாது. எனவே, வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக வர வேண்டும்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...