கோவையில் சிறப்பு குழந்தைகள் குறித்த கலந்துரையாடல்: பெற்றோர்களுக்கு RAAC அமைப்பு ஏற்பாடு

கோவையில் RAAC அமைப்பு சார்பில் சிறப்பு குழந்தைகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. குழந்தைகள் நல ஆலோசகர் மோகனவாணி பங்கேற்று பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கினார். சிறப்பு குழந்தைகளுக்கான "நம்ம ஸ்பெஷல் பார்க்" குறித்த தகவலும் பகிரப்பட்டது.


கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள RAAC அலுவலகத்தில் இன்று (செப். 04) சிறப்பு குழந்தைகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் குழந்தைகள் நல ஆலோசகர் மோகனவாணி கலந்துகொண்டு சிறப்பு குழந்தைகள் குறித்து பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கினார்.



இந்த கலந்துரையாடலில் சிறப்பு குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பது, அவர்களது மனநிலையை எப்படி சமநிலையில் வைத்துக் கொள்வது போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது மனநிலையை சீராக வைத்துக் கொள்வது மற்றும் தயக்கமின்றி உற்சாகத்தோடு சமூகத்தில் அங்கம் வகிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.



RAAC அமைப்பு சார்பில் சிறப்பு குழந்தைகளுக்கான "நம்ம ஸ்பெஷல் பார்க்" என்ற பூங்கா கோவை காளப்பட்டி சாலையில் உள்ள நேத்ரா நகரில் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பூங்கா BOSCH நிறுவனத்தின் CSR நிதி மற்றும் கோவை மாநகராட்சியின் ஒத்துழைப்புடன் அமைக்கப்படுகிறது. சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டுத் தளங்கள், ஜிப் லைன், ஏரோபிளேன் மாதிரி, பட்டாம்பூச்சி மற்றும் மூலிகை தோட்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த பூங்கா அமைக்கப்படுகிறது.



அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும், இந்த பூங்காவிற்கு செல்ல கட்டணம் ஏதும் இல்லை என்றும் RAAC அமைப்பு தெரிவித்துள்ளது. கலந்துரையாடலின் போது இந்தப் பூங்கா குறித்தும் பெற்றோர்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்றது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், புதிய உற்சாகம் பெற்றதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர். இத்தகைய கலந்துரையாடல்கள் இனி வாரந்தோறும் புதன்கிழமை காலை 11.30 மணி முதல் நண்பகல் 01:00 மணி வரை நடைபெறும் என்றும், இந்த கலந்துரையாடலில் பங்கு பெற கட்டணம் ஏதுமில்லை என்றும் RAAC அமைப்பு அறிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...