திருப்பூரில் விநாயகர் சிலை வைக்க பணம் கேட்டு உணவகத்தை சூறையாடிய நபர் கைது

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி நன்கொடைக்காக உணவக உரிமையாளரை மிரட்டி, கடையை சூறையாடிய நபர் கைது செய்யப்பட்டார். இந்து முன்னணி, குற்றவாளி தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல என்று மறுத்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை வைப்பதற்காக பணம் கேட்டு உணவகத்தை சூறையாடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து இந்து முன்னணி அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.



திருப்பூர் மாவட்டம், போயம்பாளையம், அபிராமி தியேட்டர் ரோடு, கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த கணபதி (52) என்பவர் அப்பகுதியில் தள்ளுவண்டியில் உணவகம் நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்ததாகக் கூறிய ராசுக்குட்டி மற்றும் சிலர் விநாயகர் சதுர்த்தி நன்கொடை வசூலிக்க வந்துள்ளனர். அப்போது கணபதி ரூ.550 நன்கொடை கொடுத்ததாகவும், அதற்கு ரசீது வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது.



இதன் பின்னர், கடந்த 27 ஆம் தேதி இரவு 10 மணியளவில் ராசுக்குட்டி மற்றும் நான்கு பேர் மது போதையில் கணபதியின் உணவகத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் கணபதியிடம் ரூ.3,000 நன்கொடை கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே நன்கொடை கொடுத்துவிட்டதாக கணபதி கூறியதால், ஆத்திரமடைந்த கும்பல் கணபதியை தாக்க முயன்று உணவகத்தை சூறையாடியுள்ளது.

இது குறித்து கணபதி அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்ததாகக் கூறப்பட்ட ராசுக்குட்டி (29) என்பவரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர் இந்து முன்னணியைச் சேர்ந்தவர் அல்ல எனவும், அவர் இந்து முன்னணி பெயரை தவறாகப் பயன்படுத்துவதாகவும் இந்து முன்னணி அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்து தாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகே அந்நபர் கைது செய்யப்பட்டதாகவும் அந்த அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...