மேட்டுப்பாளையத்தில் புதிய பசுமைப் பூங்கா மற்றும் பள்ளி வசதிகள் திறப்பு

நீலகிரி எம்பி ஆ.ராசா மேட்டுப்பாளையத்தில் ரூ.38 லட்சம் மதிப்பிலான பசுமைப் பூங்கா மற்றும் ரூ.53 லட்சம் மதிப்பிலான பள்ளி வசதிகளை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண்-30 சாந்தி நகர் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 38 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பசுமைப் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீலகிரி எம்பி ஆ.ராசா இன்று செப்.4 திறந்து வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.ஆ.இரவி, மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வின், துணைத் தலைவர் அருள்வடிவு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆர். சண்முகசுந்தரம், அ.அசரப் அலி, டி.பி.சுப்பிரமணியம், காரமடை ஒன்றிய கழக செயலாளர்கள் கல்யாணசுந்தரம், சுரேந்திரன், மேட்டுப்பாளையம் நகர கழக செயலாளர் முனுசாமி, முகமது யூனுஸ், மேட்டுப்பாளையம் நகர மன்ற உறுப்பினர்கள் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலர்கள், திமுக கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.



மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 29 மணி நகர் உயர்நிலைப் பள்ளியில் ரூபாய் 53 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அறிவியல் ஆய்வகம், புதிய கழிப்பறை, புதிய சுற்றுச் சுவர் ஆகியவற்றை பள்ளி மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்கு நீலகிரி எம்பி ஆ.ராசா இன்று (செப்.4) திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியிலும் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.ஆ.இரவி, மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வின், துணைத் தலைவர் அருள்வடிவு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆர்.சண்முகசுந்தரம், அ.அசரப் அலி, டி.பி.சுப்பிரமணியம், காரமடை ஒன்றிய கழக செயலாளர்கள் கல்யாணசுந்தரம், சுரேந்திரன், மேட்டுப்பாளையம் நகர கழக செயலாளர் முனுசாமி, முகமது யூனுஸ், மேட்டுப்பாளையம் நகர மன்ற உறுப்பினர்கள் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலர்கள், திமுக கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...