கோவை கிழக்கு மண்டலத்தில் மேயர் ஆய்வு: வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் பொதுமக்கள் குறைகள் கேட்டறிதல்

கோவை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் கிழக்கு மண்டலத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்து, நீலிக்கோணாம்பாளையத்தில் பொதுமக்கள் குறைகளைக் கேட்டறிந்தார். சாலை மேம்பாடு, சுகாதார நிலையம் கட்டுமானம் ஆகியவை முக்கிய கவனம் பெற்றன.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், இன்று (04.09.2024) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.





இந்த ஆய்வின்போது, கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.53க்குட்பட்ட மசக்காளிபாளையம் சாலையில் (TURIP) தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டம் 2022-23ன் கீழ் ரூ.75.45 இலட்சம் மதிப்பீட்டில் 1070 மீட்டர் தொலைவிற்கு தார் சாலை பணியினையும் மற்றும்



வார்டு எண்.54க்குட்பட்ட நீலிக்கோணாம்பாளையம் பகுதியில் 15வது மத்திய குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.1.48 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் நகர்ப்புற சுகாதார நிலைய கட்டுமானப்பணியினையும் மாண்புமிகு மேயர் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.



அதனைத்தொடர்ந்து, கிழக்கு மண்டலம் வார்டு எண்.61க்குட்பட்ட சிங்காநல்லூர் பகுதியில் தேசிய நகர்ப்புற சுகாதாரப் பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.1.20 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினையும் மற்றும் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியினையும் மாண்புமிகு மேயர் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு பள்ளியில் உள்ள வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும், வார்டு எண்.54க்குட்பட்ட நீலிக்கோணாம்பாளையம் பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வுகளின்போது, உதவி ஆணையர் முத்துச்சாமி, செயற்பொறியாளர் கருப்பசாமி, மாமன்ற உறுப்பினர்கள் மோகன், பாக்கியம், சிவா, ஆதிமகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்கண்ணா, உதவி நகர திட்டமிடுநர் புவனேஷ்வரி, உதவி பொறியாளர் ஜெகதீஸ்வரி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தார்கள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...