உடுமலையில் விநாயகர் சிலை விற்பனை மந்தம்: தொழிலாளர்கள் கவலை

உடுமலையில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு முன்னதாக, விநாயகர் சிலை விற்பனை மந்தமாக உள்ளது. கடந்த ஆண்டை விட விற்பனை குறைவாக இருப்பதால் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் வரும் ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சாக்பவுடர், தேங்காய் மஞ்சி கொண்டு அச்சில் வார்த்து சிலைகளை வடிவமைத்து வர்ணம் பூசி இறுதி வடிவம் கொடுத்து வருகின்றனர்.

வடிவமைக்கப்பட்டுள்ள சிலைகள் கண்களைக் கவரும் அழகில் மனதை ஈர்க்கின்றன. ரூ.100 முதல் ரூ.10,000 வரையில் உயரத்திற்கு ஏற்ற வகையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, உடுமலை பகுதியில் உள்ள சாலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் விநாயகர் சிலைகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.



ஆனால், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விற்பனை குறைவாக உள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், விற்பனை அதிகரித்து தங்கள் வாழ்வாதாரம் காப்பாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பில் தொழிலாளர்கள் உள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு முன் விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...