உடுமலையில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

உடுமலையில் நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் நடமாடி, சிறு திருட்டுகளில் ஈடுபடுவதாக பொதுமக்கள் அச்சம். சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.



Coimbatore: உடுமலையில் கடந்த சில மாதங்களாக நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நடமாடி வருவதாகவும், சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக அய்யலுமீனாட்சி நகர், எஸ்.எஸ். காலனி, எம்.எம். லே அவுட், வேலுச்சாமி நகர், சங்கர் நகர், திருக்குமரன் நகர், நெப்போலியன் நகர் போன்ற பகுதிகளில் இத்தகைய சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளதாக தெரிகிறது. முகமூடி அணிந்த இந்த மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் நடமாடி வருவதாகவும், பொதுமக்கள் சத்தமிட்டால் தப்பி ஓடுவதாகவும் கூறப்படுகிறது.



காவல்துறையின் அறிவுறுத்தலின்படி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், முகமூடி அணிந்த இந்த நபர்கள் எவ்வித பயமுமின்றி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் நடமாடி வருகின்றனர். இதுவரை இந்த மர்ம நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உடுமலை பகுதியில் கூடுதல் காவல்துறையினரை நியமித்து ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என்றும், இந்த மர்ம நபர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து நடக்கும் இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...