கோவை சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் முகாம்: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் வழங்கும் முகாம் தினசரி நடைபெறும் என்று ஆணையர் M சிவகுரு பிரபாகரன் அறிவித்துள்ளார். வியாபாரிகள் தேவையான ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் இன்று (செப்டம்பர் 4) வெளியிட்ட செய்திக்குறிப்பில், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் முகாம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இந்த முகாம் கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் பின்வரும் வியாபாரிகள் கலந்து கொண்டு பயனடையலாம்:

1. ஏற்கனவே சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடனுக்கு விண்ணப்பித்து கடன் கிடைக்காத வியாபாரிகள்

2. முதல் மற்றும் இரண்டாம் தவணை கடன் பெற்று முறையாக திரும்ப செலுத்திய வியாபாரிகள்

கலந்து கொள்ளும் வியாபாரிகள் பின்வரும் ஆவணங்களை கொண்டு வர வேண்டும்:

1. சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை

2. ஆதார் அட்டை

3. வங்கி கணக்கு புத்தகம்

இந்த முகாமில் கலந்து கொண்டு அனைத்து சாலையோர வியாபாரிகளும் பயனடைய வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...