கோவையில் வக்கீல் மகளைக் கடத்த முயன்ற இருவர் கைது

கோவை ரயில் நிலைய சாலையில் உள்ள ஓட்டலில் வக்கீல் குடும்பத்தினர் உணவருந்திக் கொண்டிருந்தபோது, இரு நபர்கள் வக்கீலின் மகளைக் கடத்த முயன்றனர். பொதுமக்கள் உதவியுடன் சம்பவ இடத்திலேயே இருவரும் பிடிபட்டனர்.


Coimbatore: கோவை அருகே உள்ள இருகூர் பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த வக்கீல் பிரவீன் குமார் (41), அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கோவை ரயில் நிலைய சாலையில் உள்ள ஓட்டலில் உணவருந்தச் சென்றனர். உணவருந்திய பின், பிரவீன் குமார் ஓட்டலுக்கு வெளியே ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது மனைவியும் மகளும் கழிவறைக்குச் சென்றனர்.

அப்போது, அங்கு வந்த இரு நபர்கள் பிரவீன் குமாரின் மகளைக் கடத்த முயன்றனர். இதைக் கண்ட அவரது மனைவி உடனடியாக சத்தமிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த பிரவீன் குமார், பொதுமக்களின் உதவியுடன் அந்த இருவரையும் பிடித்து கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

காவல் ஆய்வாளர் அர்ஜுன் குமார் தலைமையிலான காவல்துறையினர் அந்த இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் கோவை புதூர் குளத்துப்பாளையம் அம்மாவாசை கவுண்டர் வீதியைச் சேர்ந்த மணிவண்ணன் (30) மற்றும் பத்மநாபன் (30) என்பது தெரியவந்தது.

தற்போது இவர்களிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...