கோவை டாக்டர் என்.ஜி.பி. கல்லூரியில் 'போலீஸ் அக்கா' திட்டம் தொடக்கம்

கோவை டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில் 'போலீஸ் அக்கா' திட்டம் செப்டம்பர் 4 அன்று தொடங்கப்பட்டது. மாணவிகளின் பாதுகாப்பிற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில் 'போலீஸ் அக்கா' திட்டத்தை கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் செப்டம்பர் 4 அன்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் டாக்டர் என்.ஜி.பி. கல்விக் குழுமங்களின் இயக்குநர் பெ.இரா.முத்துசாமி வரவேற்புரை ஆற்றினார். டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி தலைமை வகித்தார்.

'போலீஸ் அக்கா' திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மாநகரக் காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், "கல்லூரி மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை பெற்றோரிடமோ, தோழிகளிடமோ கூட பகிர்ந்து கொள்வதில்லை. இதனால் சில சமயங்களில் அவர்கள் விபரீதமான முடிவுகளுக்கு தள்ளப்படுகிறார்கள். சமூக வலைதளங்களை எப்படி பாதுகாப்புடன் பயன்படுத்துவது என்பதை மாணவிகள் அறிந்து கொள்ள வேண்டும். மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் சிறிய பிரச்னைகளை கூட போலீஸ் அக்காவிடம் தெரிவித்தால் அவற்றுக்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதற்கு ஆலோசனை வழங்குவார்" என்று தெரிவித்தார்.

கோவை மாநகர துணை காவல் ஆணையர் வி.சுஹாசினி பேசுகையில், "சமூகத்தில் தற்போது ஆண், பெண் பாகுபாடின்றி பழக வேண்டிய சமத்துவமான சூழல் நிகழ்கிறது. அச்சூழலில் பெண்கள் தங்களுக்கென ஒரு எல்லைக் கோட்டை வரைந்து அதற்குள் பழக வேண்டும். அந்த எல்லைக் கோட்டை மீறும்போது பிரச்னைகள் ஏற்படுகின்றன" என்று குறிப்பிட்டார்.

இந்த திட்டம் மூலம் மாணவிகள் தங்களின் பிரச்னைகளை பகிர்ந்து கொள்ளவும், அவற்றிற்கான தீர்வுகளை பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களின் பாதுகாப்பான பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...