கோவை: அரசூர், கல்லிமடை, கதிர்நாயக்கன்பாளையம் பகுதிகளில் நாளை மின்தடை

கோவை மாவட்டத்தில் அரசூர், கல்லிமடை, கதிர்நாயக்கன்பாளையம் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்டம்பர் 6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படும்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் அரசூர், கல்லிமடை, கதிர்நாயக்கன்பாளையம் ஆகிய மூன்று துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை (செப்டம்பர் 6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசூர் துணைமின் நிலையத்தின் கீழ் உள்ள அரசூர், பொதியாம்பாளையம், வாகராயம்பாளையம், செல்லப்பம்பாளையத்தின் ஒரு பகுதி, குரும்பபாளையம், ராசிபாளையம், நீலம்பூர் பகுதி, ஊத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

கல்லிமடை துணைமின் நிலையத்தின் கீழ் உள்ள கல்லிமடை, பாலன் நகர், வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, சர்க்கரை செட்டியார் நகர், மசக்காளிபாளையம், காமராஜ் சாலை, உப்பிலிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

கதிர்நாயக்கன்பாளையம் துணைமின் நிலையத்தின் கீழ் உள்ள கதிர்நாயக்கன்பாளையம், குமாரபுரம், நாசிமநாயக்கன்பாளையம், பம்பாய் நகர், டீச்சர்ஸ் காலனி, கணேஷ்நகர், ஸ்ரீ ராம் நகர், தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

இந்த மின்தடை காரணமாக பாதிக்கப்படும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...