கோவையில் 'கோட்' திரைப்படத்தைக் காண பிராட்வே திரையரங்கிற்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன்

கோவையில் நடிகர் விஜயின் 'கோட்' திரைப்படம் வெளியான நாளில், நடிகர் சிவகார்த்திகேயன் பிராட்வே திரையரங்கிற்கு வந்து படத்தைப் பார்த்தார். ரசிகர்கள் அதிகாலையிலேயே திரையரங்கில் குவிந்தனர்.



Coimbatore: கோவையில் உள்ள பிராட்வே திரையரங்கில் நடிகர் விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தைக் காண நடிகர் சிவகார்த்திகேயன் தொப்பி அணிந்து பிராட்வே திரையரங்கிற்கு வந்தார்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படம் விஜயின் 68வது திரைப்படமாகும். பிராட்வே திரையரங்கில் காலை 7 மணி அளவில் படம் திரையிடப்பட்டது. மேலும், பிராட்வே திரையரங்கில் மூன்று திரைகளில் படம் திரையிடப்பட்டது.

அதிகாலை 6 மணி முதலே ஏராளமான ரசிகர்கள் படத்தைக் காண திரையரங்கில் குவிந்தனர். பலர் குடும்பத்துடன் வந்திருந்தனர். பிற திரையரங்குகளில் காலை 9 மணிக்கு சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன.

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கிய பின்னர் வெளியாகும் முதல் படம் என்பதால், இப்படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர். "இயல்வது கரவேல்" என்ற வாசகத்துடன் ரசிகர்கள் உற்சாகமாக படத்தைக் காண வந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...