மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி: துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் பாதுகாப்பு பேரணி

மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 500க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்ற பாதுகாப்பு பேரணி நடைபெற்றது. துப்பாக்கி ஏந்திய சிறப்பு அதிரடி படையினரும் பங்கேற்றனர்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் உட்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்ற பாதுகாப்பு பேரணி நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காரமடை, சிறுமுகை, அன்னூர் போன்ற பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சனிக்கிழமை பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று பவானி ஆற்றில் கரைக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.



மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள நிலையில் அதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.



விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை ஒட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார் தலைமையில் கொடி அணிவகுப்பு மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.



மேட்டுப்பாளையம் கோ-ஆபரேட்டிவ் காலனி பகுதியில் இருந்து காவல் நிலையம் வரை நடைபெற்ற இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.



சட்டம் ஒழுங்கு போலீசார், அதிரடி படையினர், ஊர்க்காவல் படையினர் போலீசார் இந்த பேரணியில் பங்கேற்றததுடன் சிறப்பு அதிரடி படையினர் கையில் துப்பாக்கி ஏந்தி பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...