கோவை மாநகராட்சி ஆணையர் மண்டல அளவிலான கபடி போட்டிக்கு தேர்வான மாணவிகளை வாழ்த்தினார்

கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன், மண்டல அளவிலான கபடி மற்றும் தடகள போட்டிகளுக்கு தேர்வான மூன்று மாணவிகளை வாழ்த்தினார். மாணவிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற ஊக்கமளித்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (05.09.2024), மண்டல அளவிலான கபடி மற்றும் தடகள போட்டிகளுக்கு தேர்வான மூன்று மாணவிகளை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் வாழ்த்தினார்.

மத்திய மண்டலம் அரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவி எஸ். இதழ்யஸ்ரீ, இளையோர் தடகளப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். அதேபோல், 10-ம் வகுப்பு மாணவிகளான எஸ். மோனிஷா மற்றும் ஐ.ஜாய்ஸ்மின் ஆகியோர் கபடிப் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இம்மூன்று மாணவிகளும் மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் பாராட்டினார். மேலும், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டுமென மாணவியர்களுக்கு ஆணையாளர் வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் வித்யா இராமநாதன் மற்றும் மாநகர கல்வி அலுவலர் குணசேகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...