வடவள்ளியில் வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்தநாள்: மேற்கு மண்டல தலைவர் மரியாதை

கோவை வடவள்ளியில் வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்தநாளை முன்னிட்டு, மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


கோவை: வடவள்ளி பழைய பேருந்து நிலையத்தில் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (5/9/2024) சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.

வடவள்ளி பகுதி திமுக செயலாளர் வ.ம.சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோவை மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, வ.உ.சிதம்பரனாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் வட்டக் கழக செயலாளர்கள் விஸ்வநாதன், வேலுச்சாமி, மகாலட்சுமி ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும், மதன், கதிரேசன், சீனிவாசன், சுந்தர்ராஜன், சூர்யா, ஜேம்ஸ் உள்ளிட்ட கழக தோழர்களும், வஉசி பேரவை நிர்வாகிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

வ.உ.சிதம்பரனாரின் தியாகங்களையும், தமிழ் மொழி மீதான அவரது பற்றையும் நினைவு கூர்ந்த பங்கேற்பாளர்கள், அவரது வழியில் தொடர்ந்து செயல்பட உறுதியேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...