கோவை கருமத்தம்பட்டி அருகே நிற்காமல் சென்ற பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்

கோவை காந்திபுரத்திலிருந்து திருப்பூர் செல்லும் தனியார் பேருந்து, கருமத்தம்பட்டியில் நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்தனர். போலீசார் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைத்தனர்.


கோவை: கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அவிநாசி சாலை வழியாக திருப்பூருக்கு ஏராளமான தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், செப்டம்பர் 5 அன்று காந்திபுரத்திலிருந்து திருப்பூர் செல்லும் கே.எம்.எஸ் என்ற தனியார் பேருந்தில் கருமத்தம்பட்டி செல்வதற்காக சில பயணிகள் ஏறினர்.

பேருந்து புறப்பட்ட பின், நடத்துனர் கருமத்தம்பட்டியில் பேருந்து நிறுத்தப்படாது என்று கூறி, பயணிகளை திட்டி பாதி வழியிலேயே இறக்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட பயணிகள், இது குறித்து ஊர் பொதுமக்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

பேருந்து கருமத்தம்பட்டி அருகே வந்தபோது, ஊர் பொதுமக்கள் பேருந்தை சுற்றி வளைத்து சிறைபிடித்தனர்.



அவர்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இச்சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, பேருந்து சேவைகளை முறையாக நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...