மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் விநாயகர் சிலை கரைக்க ஏற்பாடுகள் தீவிரம்

மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. பவானி ஆற்றில் சிலைகள் கரைக்க ஏதுவாக சகதிகள் அகற்றப்படுகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேட்டுப்பாளையம், அன்னூர், காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த சிலைகள் பவானி ஆற்றில் கரைக்கப்பட உள்ளன.

விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு மேட்டுப்பாளையம் சுப்பிரமணியர் கோவில் அருகே பவானி ஆற்றில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



தற்போது அந்த இடம் சகதியாக இருப்பதால், பாதுகாப்பு கருதியும் எளிதில் சிலைகளை கரைக்க ஏதுவாகவும் சகதிகளை அப்புறப்படுத்தும் பணிகள் மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையின் மூலம் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு நடைபெற்று வருகிறது.

சி டி சி டெப்போ முதல் சுப்பிரமணியர் கோவில் வரை சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட உள்ள நிலையில், பாதுகாப்பு கருதி 50க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க நகர் முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த ஏற்பாடுகள் மூலம் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...