விநாயகர் சதுர்த்தி விழா: பொள்ளாச்சியில் போலீஸ் அணிவகுப்பு ஊர்வலம்

பொள்ளாச்சியில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 300-க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். பாதுகாப்பான விழா கொண்டாட்டத்தை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.



கோவை: பொள்ளாச்சியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். 300-க்கும் மேற்பட்ட போலீசார் முக்கிய வீதிகளில் அணிவகுத்து சென்றனர்.

பொள்ளாச்சி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி, இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 227 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் செம்பாகவுண்டர் காலனி உள்ளிட்ட சில இடங்கள் பதட்டமான இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.



பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை பாதுகாப்பான முறையில் கொண்டாடவும், அவர்களின் அச்சத்தை போக்கும் வகையிலும் இந்த போலீஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது. கோவை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கொடியசைத்து இந்த அணிவகுப்பு ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.



பொள்ளாச்சி காந்தி சிலை பகுதியில் தொடங்கிய இந்த ஊர்வலம், உடுமலை சாலை வழியாக அரசு மருத்துவமனை, கடைவீதி, வெங்கட்ராமன் பள்ளி, மத்திய பேருந்து நிலையம், பாலக்காடு சாலை வழியாக சென்று நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள காவலர் திருமண மண்டபம் பகுதியில் நிறைவடைந்தது.



இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் பொள்ளாச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை காவலர்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.

பொள்ளாச்சி பகுதியில் அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட, சிலைகள் வைக்கப்படும் இடங்கள், பொது இடங்கள், கோவில்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...