கோவை விமான நிலையத்தில் 'டிஜி யாத்ரா' திட்டம் தொடக்கம்: மத்திய அமைச்சர் காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் 'டிஜி யாத்ரா' திட்டம் தொடங்கப்பட்டது. மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு காணொலி காட்சி மூலம் திட்டத்தை துவக்கி வைத்தார். பயணிகளின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் விமான நிலைய செயல்பாடுகளை டிஜிட்டல்மயமாக்கும்.


Coimbatore: கோவை சர்வதேச விமான நிலையத்தில் 'டிஜி யாத்ரா' திட்டம் இன்று தொடங்கப்பட்டது. விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் நேற்று நடந்த நிகழ்வில், காணொலி காட்சி மூலம் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு 'டிஜி யாத்ரா' திட்டத்தை தொடங்கி வைத்தார்.

விமான பயணிகளின் வசதிக்காக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் 'டிஜி யாத்ரா' வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக டெல்லி, பெங்களூரு, வாரணாசி, ஹைதராபாத், கொல்கத்தா, விஜயவாடா, புனே, மும்பை, கொச்சி, அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், கவுஹாத்தி விமான நிலையங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது கட்டமாக கோவை உள்ளிட்ட பாட்னா, ராய்பூர், புவனேஸ்வர், கோவா(தாபோலிம்), இந்தூர், பாக்டோகரா, விசாகப்பட்டினம் ஆகிய விமான நிலையங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று மத்திய அமைச்சர் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

விமான நிலைய அதிகாரிகள் கூறும் போது, "பொதுவாக பயணிகள் 'போர்டிங் பாஸ்' பெற விமான நிலைய வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற நடவடிக்கைகளை எளிதாக்கவும், டிஜிட்டல்மயமாக்கும் நோக்கத்திலும் மத்திய சிவில் விமான போக்கு வரத்து அமைச்சகம் சார்பில் 'டிஜி யாத்ரா' என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது."

பயணிகள் முதலில் 'டிஜி யாத்ரா' செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின் மொபைல் எண், போர்டிங் பாஸ், ஆதார், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். போர்டிங் பாஸ் ஸ்கேன் செய்தால் பிரத்யேக 'கியூ ஆர் கோடு' கிடைக்கும்.

அதை வைத்து விமான நிலையத்தில் தனியாக ஏற்படுத்தப்பட்ட வழியில் உள்ள டிஜிட்டல் கருவியில் மொபைல் போனில் உள்ள விவரங்கள் மற்றும் தங்களின் முகத்தை காண்பித்து உடனடியாக ஒப்புதல் பெற்று உள்ளே செல்லலாம். குறிப்பாக மொபைல் போன் எண்ணுடன் ஆவணங்கள் அனைத்தும் லிங்க் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...