மேட்டுப்பாளையம் அருகே குரங்குகள் அட்டகாசம்: பூனை உயிரிழப்பு, நாய்கள் படுகாயம்

மேட்டுப்பாளையம் அருகே கூடுதுறை மலைப்பகுதியில் குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. ஒரு பூனை உயிரிழந்தது, இரண்டு நாய்கள் படுகாயமடைந்தன. மக்கள் பாதுகாப்பு கோரி வனத்துறையிடம் முறையிட்டுள்ளனர்.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சாரத்துக்குட்பட்ட சமயபுரம் அருகே உள்ள கூடுதுறை மலைப்பகுதியில் குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இப்பகுதியில் ஒரு பூனை குரங்கால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளது, மேலும் இரண்டு நாய்கள் படுகாயமடைந்துள்ளன.

கூடுதுறை மலைப்பகுதி பவானி ஆற்றின் அருகேயும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியும் அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியின் அமைப்பு காரணமாக குரங்கு உள்ளிட்ட வன உயிரினங்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.



சமீபத்தில், இப்பகுதியில் வசிக்கும் தங்கமணி என்பவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட பூனையை ஒரு குரங்கு தாக்கி, அதன் வயிற்றுப் பகுதியைக் கிழித்துள்ளது. இந்த தாக்குதலில் பூனை உயிரிழந்தது. அதே குரங்கு அருகில் இருந்த இரண்டு நாய்களையும் கழுத்துப் பகுதியில் கடுமையாகத் தாக்கியுள்ளது. இதனால் நாய்களுக்கு கழுத்தில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் அச்சமடைந்த பொதுமக்கள், குரங்குகள் குடியிருப்புகளுக்குள் நுழைந்து குழந்தைகளையும் தாக்க வாய்ப்பு உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். எனவே, வனத்துறை அதிகாரிகள் விரைவில் கூண்டு வைத்து சேட்டை செய்யும் குரங்குகளைப் பிடித்து, அடர் வனப் பகுதிக்குள் விட வேண்டும் என கூடுதுறை மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...