அன்னூரில் இந்து மக்கள் கட்சி நிர்வாகியின் வீட்டில் விநாயகர் சிலை பிரதிஷ்டை: அர்ஜுன் சம்பத் பங்கேற்பு

அன்னூரில் பொது இடத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்து மக்கள் கட்சி நிர்வாகியின் வீட்டில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அர்ஜுன் சம்பத் பங்கேற்றார்.


Coimbatore: கோவை மாவட்டம் அன்னூரில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பொது இடத்தில் விநாயகர் சிலை வைக்க இந்து மக்கள் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டில் சிலையை பிரதிஷ்டை செய்தார் அர்ஜுன் சம்பத்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, அன்னூர் பகுதியில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபட அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து கடிதம் கொடுத்து வந்தனர். ஆனால், புதிதாக எந்த இடத்திலும் விநாயகர் சிலை வைக்க அரசு அனுமதிக்கவில்லை என்ற காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்டது.



இதனை எதிர்த்து, கடந்த வாரம் அன்னூர் பேருந்து நிலையம் முன்பு அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், உயர் அதிகாரிகளிடம் பேசி முடிவெடுக்கப்படும் என காவல்துறை வட்டாரத்தில் இந்து மக்கள் கட்சியிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், விநாயகர் சதுர்த்தி நாள் வரை அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி குட்டி ராஜேந்திரனின் வீடு அமைந்துள்ள அன்னூர் ஏ எம் பாளையம் பகுதியில், அவரது வீட்டில் ஆறு அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த விநாயகர் சிலைக்கு வழிபாடு நடத்தப்படும் என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்தால் அர்ஜுன் சம்பத்தை கைது செய்ய அன்னூர் போலீசார் திட்டமிட்டிருந்த நிலையில், வீட்டிலேயே சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதால் போலீசார் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...