மேட்டுப்பாளையத்தில் எல் முருகன் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஏழு அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கனபதி ஹோமம் நடத்தப்பட்டது.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பொன்விழா நகர் பகுதியில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, ஏழு அடி உயரமுள்ள விநாயகர் சிலை அலுவலகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அதிகாலையில் கனபதி ஹோமம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.



இந்த விழா நிகழ்ச்சிக்கு பா.ஜ.க நீலகிரி பாராளுமன்ற பொறுப்பாளர் நந்தகுமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க துணைத் தலைவர் விக்னேஷ், முன்னாள் நகராட்சி தலைவர் சதீஷ், சிறுமுகை நகர தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...