விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கு கடும் கட்டுப்பாடுகள்: இந்து முன்னணி எச்சரிக்கை

மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு. இதேநிலை தொடர்ந்தால் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை.



Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 300 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. 4 அடி முதல் 12 அடி உயரம் வரை பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.



காலை முதல் சிலைகளுக்கு கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டைகள் படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரண்டு நாட்கள் வழிபாட்டுக்குப் பிறகு, சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கரைக்கப்பட உள்ளன.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் இந்து முன்னணி சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்குமார், "எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாடு அரசும் காவல்துறையும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு கடும் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி சிக்கலை ஏற்படுத்தி வருகின்றனர்" என்று குற்றம்சாட்டினார்.

"விநாயகர் சதுர்த்தி என்பது இந்து முன்னணி விழா அல்ல. பொங்கல், தீபாவளி போன்று அது ஒரு மக்கள் விழாவாக மாறிவிட்டது. எனவே தமிழ்நாடு அரசும் காவல்துறையும் இனிவரும் காலங்களிலாவது தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து சிலை வைக்கவும் வழிபடவும் அனுமதி மறுக்கப்பட்டால் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்" என இந்து முன்னணி எச்சரித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...