உடுமலையில் 100 ஆண்டு பழமையான பிரசன்ன விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

உடுமலையில் உள்ள 100 ஆண்டு பழமையான பிரசன்ன விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர். சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள புகழ்பெற்ற 100 ஆண்டுகள் பழமையான அருள்மிகு பிரசன்ன விநாயகர் கோவிலில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.

காலையில் ஹோம பூஜையும், பால், தயிர் உட்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.

இதேபோல, உடுமலையின் பிற பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. அரசு மருத்துவமனை பகுதியில் உள்ள வினைத்தீர்க்கும் விநாயகர் கோவிலில் தங்க காப்பு அலங்காரமும், உடுமலை குட்டை திடல் பகுதியில் உள்ள ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சந்தன காப்பு மற்றும் மலர்களால் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. இங்கும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...