உடுமலையில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளை அவமதித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட பொருளாளர் மாலினி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டனம் தெரிவித்தனர். அங்கு, அறிவியலுக்கு புறம்பான மூடநம்பிக்கை கருத்துக்களை மாணவர்களிடம் பேசிக் கொண்டிருந்தவரை, ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் தட்டிக் கேட்டபோது, அவர் மாற்றுத்திறனாளிகளின் பிறப்பை இழிவுபடுத்தி பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.



இந்த சம்பவத்தில் மாற்றுத்திறனாளிகளை அவமதித்த நபர் மீது மாற்றுத்திறனாளி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். மேலும், கேள்வி கேட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியரின் பணியிட மாற்றத்தை உடனடியாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய தொழிற்சங்க மையம் (CITU) திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றிய செயலாளர் கனகராஜ், திருப்பூர் மாவட்ட செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...