அதிமுக இரு அணிகள் இணைவதில் விரைவில் தீர்வு கிடைக்கும்- கோவையில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேட்டி

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் இருந்து சென்னை கிளம்பினார். அவரை, கோவை விமான நிலையத்தில் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன் கூறுகையில், கொப்பரை தேங்காயை அத்தியாவசிய பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். இதன் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

விவசாயிகள் போராட்டம் மத்திய அரசுக்கு எதிரானது. மாநில அரசு கூட்டுறவு வங்கி கடன்களை ரத்து செய்துள்ளது. மத்திய அரசு அதிமுக-வினை ஆட்டுவிக்கின்றது என அதிமுகவினர் யாரும் சொல்லவில்லை, ஊடகங்கள்தான் சொல்கின்றன. இரு அணிகள் இணைப்பிற்கான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட குழு சிறப்பாக  à®šà¯†à®¯à®²à¯à®ªà®Ÿà¯à®•ின்றது. 

பி.ஏ.பி பாசன திட்டத்தில் இதுவரை கட்டாமல் இருக்கும் ஆனைமலை நல்லாறு அணை திட்டதிற்கு மத்திய அரசிடம் ரூ.1500 கோடி கேட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, விரைவில் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். ஆனைமலை நல்லாறு திட்டம் செயல்படுத்தபட்டால் கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறக்கும் என மகேந்திரன் பேசினார்.

இதனைத்தொடர்ந்து, சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டியளிக்கையில், தமிழகத்தில் நீரா பானம் உற்பத்தி செய்ய அனுமதிக்கக் கோரி விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில், நீரா பானம் உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நீரா பான உற்பத்தி விரைவில் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் ஒரு தென்னை மரத்திற்கு 1500 ரூபாய் வீதம் ஆண்டு ஒன்றிக்கு விவசாயிகளுக்கு 18000 ரூபாய் லாபம் கிடைக்கும். 

வறட்சி நிவாரணம் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே வழங்கபட்டுள்ளது. விடுபட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். லாரிகள் மூலம் தண்ணீர் எடுத்து வந்து கால் நடைகள், தென்னை மரங்களை காப்பாற்றுவது தவறில்லை. இரு அணிகள் இணைப்புக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. உள்ளாட்சி, சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் மீண்டும் அதிமுக வெற்றி பெறும். திமுக காலுன்ற முடியாது என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, ஊரக வளார்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டியளிக்கையில், அதிமுக இரு அணிகள் சார்பாக வழக்குகள் போடப்பட்டு இருந்தாலும் இரு அணிகள் இணையும் போது வழக்குகள் அனைத்துமே திரும்ப பெறப்படும். ஓ.பி.எஸ் தரப்பினர் எப்பொழுது வந்தாலும் பேச்சு வார்த்தைக்கு தங்கள் தரப்பு தயாராகவே உள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இரு அணிகள் இணைப்பின் பேச்சுவார்த்தை தொடர்பாக ஊடகங்களிடம் பேசுவதை தவிர்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். நேரடியாக இரு அணியினரும் உட்கார்ந்து பேசினால் இரு அணிகளுக்கும் இடையில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க முடியும். 

இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும். தொண்டர்களின் உணர்வுகளை மதித்து அந்த தரப்பினரை (தினகரன்) விலக்கி வைத்துள்ளோம். இன்று மாலை அமைச்சர்கள் அனைவரும் சென்னை சென்று விடுவோம். பேச்சுவார்த்தை விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...