கோவை நஞ்சுண்டாபுரம் சாலையில் பொது இடத்தில் குப்பை கொட்டியவருக்கு ரூ.2,000 அபராதம்

கோவை நஞ்சுண்டாபுரம் சாலையில் பொது இடத்தில் காரில் வந்து குப்பை கழிவுகளை கொட்டிய நபருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது. மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


Coimbatore: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொது இடங்களில் குப்பைகளை கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டு, வீடு வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனித்தனியாக பிரித்து சேகரிக்கப்பட்டு வருகிறது.


பொது இடத்தில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் உத்தரவின் பேரில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில், நஞ்சுண்டாபுரம் சாலை ஓரத்தில் ஒருவர் காரில் வந்து குப்பை கொட்டுவதாக சுகாதாரத்துறை ஆய்வாளர் ஜெகநாதனுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் சம்பவ இடத்திற்கு செப்டம்பர் 7 அன்று விரைந்து சென்று, அங்கு குப்பையை கொட்டிய நபரை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் நேதாஜி நகரைச் சேர்ந்த அன்பு என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு ரூபாய் 2,000 அபராதம் விதிக்கப்பட்டது.


இந்த நடவடிக்கையை கண்ட பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டினர். மேலும், இது போன்று கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டி செல்லும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...