வால்பாறையில் 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை: விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிலைகள் எஸ்டேட் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, வரும் 15-ஆம் தேதி நடுமலை ஆற்றில் கரைக்கப்படும்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த சிலைகள் எஸ்டேட் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

வால்பாறை சுப்பிரமணி சுவாமி திருக்கோவிலில் 108 விநாயகர் சிலைகளும் கொண்டுவரப்பட்டு, அங்கு பூஜை செய்யப்பட்டன. பின்னர், ஒவ்வொரு எஸ்டேட் பகுதிக்கும் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன. வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி இந்த சிலைகள் நடுமலை ஆற்றில் கரைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை சிறுவர் பூங்கா பகுதியில் வைக்கப்பட்டுள்ள மும்பை ராஜா விநாயகர் சிலைக்கு அப்பகுதி மக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...