பல்லடத்தில் விநாயகர் சதுர்த்தி: இந்து முன்னணி சார்பில் முளைப்பாரி ஊர்வலம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே டி கே டி மில் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே டி கே டி மில் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, விநாயகர் சிலை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றாகத் திரண்டு கும்மியடித்து மகிழ்ந்தனர்.

இந்து முன்னணி நகர பொதுச்செயலாளர் டி கே டி ராஜா தலைமையில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.



இந்த ஊர்வலம் டி கே டி மில் பகுதியில் தொடங்கி, முருகன் மில் பகுதி வழியாக சென்று, விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் நிறைவடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு முளைப்பாரி ஊர்வலத்தை சிறப்பித்தனர். இந்து முன்னணியினர் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...