கோவை யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரியில் விமான உதிரி பாகங்கள் மற்றும் ட்ரோன் கண்காட்சி

கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் விமான உதிரி பாகங்கள் மற்றும் ட்ரோன் கண்காட்சி நடைபெற்றது. 5000-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் விமான உதிரி பாகங்கள் மற்றும் ட்ரோன் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சிக்கு கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.

யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் இன்ஜினீரியர் எஸ். சண்முகம் தலைமை வகித்தார். கோவை CRPF கமாண்டர் ஆண்டனி பென்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

தனது உரையில் ஆண்டனி பென்சன், மாணவர்கள் தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி செய்து புதிய கண்டுபிடிப்புகளை சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் என்றும் கூறினார். யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் முனைவர் சி.ஏ.எம். கைலாஷ் குமார் மற்றும் செயலாளர் வி. அருண் கார்த்திகேயன் ஆகியோர் விழாவிற்கு வாழ்த்துரை வழங்கினர்.



கண்காட்சியின் சிறப்பம்சமாக விமானங்களின் மாதிரிகள், ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வாகனங்களின் அணிவகுப்பு, ரேடியோ கட்டுப்பாட்டில் இயங்கும் சிறிய ரக விமானங்களின் மாதிரிகள் மற்றும் ட்ரோன்களின் செயல்பாடு, விமானங்களின் செயல்முறை விளக்கம், மாதிரிகளை இயக்கும் வாய்ப்பு, ஆளில்லா விமானங்களை செயல்படுத்தும் விமானிகளுடன் நேரடியாக உரையாடும் வாய்ப்பு ஆகியவை இடம்பெற்றன.



இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியை 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 4000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...