தாராபுரம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்களின் அராஜகம் - வைரலாகும் வீடியோ

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துக்கு வழி விடாமல் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அராஜகம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துக்கு வழி விடாமல் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அராஜகம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தாராபுரம் அரசு போக்குவரத்து கழக கிளை பேருந்து ஒன்று, கரூர் செல்வதற்காக தாராபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்தது. அப்போது, தாராபுரம் முதல் கரூர் வரை செல்லும் தனியார் பேருந்து (TN 47 V 2005) ஓட்டுநர்கள், அரசு பேருந்துக்கு வழி விடாமல் அராஜகம் செய்தனர். மேலும், மற்றொரு தனியார் பேருந்து (TN 47 AF 9559) உரிமையாளர் கந்தன் என்பவரும் அரசு பேருந்துக்கு வழிமறித்து அராஜகம் செய்தார்.



இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களிடையே இச்சம்பவம் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...