காரமடை அருகே குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியல்: அரசு பேருந்து சிறைபிடிப்பு

கோவை மாவட்டம் காரமடை அருகே கண்டியூர் பகுதியில் குடிநீர் கிடைக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரசு பேருந்தை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கெம்மாரம்பாளையம் ஊராட்சியின் கண்டியூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் செப்டம்பர் 7 ஆம் தேதி காலையில் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது, அவ்வழியாக வந்த அரசு பேருந்தை மக்கள் சிறைபிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த காரமடை காவல்துறையினரும், ஊராட்சி மன்றத் தலைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் தற்காலிக ஏற்பாடுகள் மூலம் குடிநீர் வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...