கோவை ரேஸ்கோர்ஸில் 'ஹிஜாப் சவால்' வீடியோ: யூடியூபர் கைது

கோவை ரேஸ்கோர்ஸில் நடைபயிற்சிக்கு வந்த பெண்களுக்கு 'ஹிஜாப் சவால்' என்ற பெயரில் வீடியோ எடுத்த யூடியூபர் அனஸ் அகமது கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சிக்கு வந்த பெண்களுக்கு 'ஹிஜாப் சவால்' என்ற பெயரில் வீடியோ எடுத்து யூடியூபில் வெளியிட்ட யூடியூபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.



குன்னூரைச் சேர்ந்த அனஸ் அகமது என்ற யூடியூபர், கடந்த செப்டம்பர் 3-ம் தேதி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சிக்கு சென்ற இளம்பெண்களிடம் 'ஹிஜாப் சவால்' என்ற பெயரில், ஹிஜாப் அணிந்து பார்க்க விருப்பமா என தொகுப்பாளரை வைத்து கேள்வி கேட்க வைத்தார். விருப்பமுள்ள சில பெண்கள் ஹிஜாப் அணிந்தும் பார்த்தனர். பின்னர் ஹிஜாபுடன் இருக்கும் புகைப்படங்களை இளம் பெண்களிடம் தொகுப்பாளர் காட்டினார்.

இந்த வீடியோ குறிப்பிட்ட யூடியூப் பக்கத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கணபதி பகுதியைச் சேர்ந்த 'பாரத் சேனா' என்ற அமைப்பைச் சேர்ந்த குமரேசன், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் யூடியூப் பக்கத்தை நடத்தியவர், வீடியோவை பதிவு செய்தவர் உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. யூடியூப் சேனலின் உரிமையாளர் அனஸ் அகமது செப்டம்பர் 7-ம் தேதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதி, அனஸ் அகமதுவை வரும் செப்டம்பர் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...