கோவையில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை: காதல் விவகாரம் காரணமா?

கோவையில் தனியார் கல்லூரியில் பி.இ படித்து வந்த 23 வயது மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காதல் விவகாரம் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


கோவை: கோவை சின்னவேடம்பட்டி துடியலூர் ரோட்டை சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவர் இந்திரஜித் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திரஜித்தின் தாயார் பபிதா (42) ஐடி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக அவர் தனது கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்திரஜித் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ நான்காம் ஆண்டு படித்து வந்தார்.

சமீப காலமாக இந்திரஜித் கோத்தகிரியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த அவரது தாயார் பபிதா அதனை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த இந்திரஜித், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு கத்தியால் தனது கையில் வெட்டிக்கொண்டு தாயாரை மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்த இந்திரஜித், நேற்று (செப்டம்பர் 7) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார், இந்திரஜித்தின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திரஜித்தின் தற்கொலைக்கு காதல் விவகாரம் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...