கோவை வேலாண்டிபாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பால், முட்டை வழங்கல்

கோவை வேலாண்டிபாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாராந்திர ஊட்டச்சத்து உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. பால், முட்டை, பழம், ரொட்டிகள் உள்ளிட்டவை ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டன.



கோவை: கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வாராந்திர ஊட்டச்சத்து உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில், விலையில்லா ஊட்டசத்து நிறைந்த உணவுகள் வழங்கப்பட்டன.

இந்த வாரம் நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்களுக்கு பால், முட்டை, பழம், மற்றும் ரொட்டிகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை மாவட்ட செயலாளர் சம்பத், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி நிகழ்வைத் துவக்கி வைத்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த முயற்சி வேலாண்டிபாளையம் பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வாராந்திர அடிப்படையில் நடைபெறும் இந்த உணவு வழங்கும் நிகழ்வு, பல ஏழை குடும்பங்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...