கோவை உருமாண்டம்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் 32வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா

கோவை உருமாண்டம்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் 32வது ஆண்டாக விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கணபதி ஹோமம், விநாயகர் ஊர்வலம், திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதானம் ஆகியவை நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களாக அமைந்தன.



Coimbatore: கோவை உருமாண்டம்பாளையத்தில் இந்து முன்னணி சார்பாக 32வது ஆண்டாக விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

விழாவின் ஒரு முக்கிய நிகழ்வாக, ஜி.என்.மில்ஸ் எல்லை மாகாளியம்மன் திருக்கோவிலிலிருந்து உருமாண்டம்பாளையம் மாகாளியம்மன் திருக்கோவிலுக்கு விநாயகர் அலங்கார சாரட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இந்த ஊர்வலத்தில் கேரளத்து செண்டை மேளம் முழங்க, சிங்காரி மேளத்துடன் ஜமாத் அடித்து விநாயகர் அழைத்து வரப்பட்டார்.



மாலை 7 மணி அளவில் 251 பெண் பக்தர்கள் ஒரே வண்ண ஆடையில் கலந்து கொண்ட திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், குத்துவிளக்கு, மஞ்சள், குங்குமம், மஞ்சள் சரடு, அரிசி, வளையல், பழங்கள், வெற்றிலை, பாக்கு, உதிரிபூக்கள் ஆகியவற்றை வைத்து பூஜைகள் தொடங்கப்பட்டன.



பின்னர் 108 அம்மன் போற்றி பாடல்கள் பாடப்பட்டு திருவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதியில், அங்கு கூடியிருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...