கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு வளாகத்தை சுற்றி ரத்தம் கலந்த தண்ணீர் கசிவு - மக்கள் அதிர்ச்சி

கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு வளாகத்தை சுற்றி ரத்தம் கலந்த தண்ணீர் கசிவு கண்டறியப்பட்டுள்ளது. இது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி, பொதுமக்களை அச்சுறுத்துகிறது. விரைவான தீர்வுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Coimbatore: கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு வளாகத்தை சுற்றி ரத்தம் கலந்த தண்ணீர் கசிவு கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மேற்கு மண்டலத்தின் முக்கிய மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு கோவை மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருகை தருகின்றனர்.

கடந்த சில நாட்களாக மருத்துவமனை வளாகத்தில் உள்ள உடற்கூராய்வு மையத்தின் முன்பு ரத்தம் கலந்த தண்ணீர் வெளியேறி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதி பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடமாகும். இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, "தினசரி சுமார் 20 உடல்களுக்கு உடற்கூராய்வு செய்யப்படுகிறது. மாலை நேரத்தில் உடற்கூராய்வு மேடைகளை கழுவும்போது வரும் நீரே இவ்வாறு வெளியேறுகிறது" என்று தெரிவித்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனை வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிளீச்சிங் பவுடரின் வெள்ளை நிறம் முழுவதும் ரத்த சிவப்பு நிறமாக மாறியுள்ளது. மேலும் மருத்துவமனை வளாகத்தின் பிற பகுதிகளிலும் கழிவு நீர் வெளியேறி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்னை குறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நிர்மலா கூறுகையில், "இந்த பிரச்னையை சரி செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரச்னை சரி செய்யப்படும்" என்று உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்தை மேம்படுத்தவும், நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...