விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: நீலகிரி சுற்றுலா செல்பவர்கள் மதியம் 2 மணிக்குள் கோவை திரும்ப காவல்துறை அறிவுறுத்தல்

மேட்டுப்பாளையத்தில் இன்று நடைபெறும் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா செல்பவர்கள் மதியம் 2 மணிக்குள் கோவை திரும்ப காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


Coimbatore: மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் இன்று (செப்டம்பர் 9) நடைபெறவுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா சென்றவர்கள் மதியம் 2 மணிக்குள் கோவை திரும்ப போலீசார் நேற்று (செப்டம்பர் 8) அறிவுறுத்தியுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் நகரில் இந்து முன்னணி சார்பில் 85 இடங்களிலும், காரமடையில் 140 இடங்களிலும், சிறுமுகையில் 35 இடங்களிலும், அன்னூரில் 40 இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

காரமடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் கண்ணார்பாளையத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தேக்கம்பட்டி பகுதியில் உள்ள பவானி ஆற்றில் திங்கள்கிழமை விசர்ஜனம் செய்யப்படவுள்ளன. சிறுமுகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் பழத்தோட்டம் பகுதியிலும், அன்னூர், அவிநாசி தாலுகா பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் சிறுமுகை எல்லாப்பாளையம் பகுதியிலும் விசர்ஜனம் செய்யப்படும்.

மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் மேட்டுப்பாளையம்-கோவை சாலையில் சி.டி.சி. டிப்போ அருகில் மதியம் 1 மணியளவில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கரைக்கப்படும். இதன் காரணமாக, மேட்டுப்பாளையம்-உதகை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா சென்றுள்ள மக்கள், தங்களது பயணங்களை இதற்கு ஏற்றார்போல மாற்றிக் கொள்ள வேண்டும் என்று காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வருபவர்கள், கோவை விமான நிலையத்துக்கு செல்பவர்கள் மதியம் 2 மணிக்குள் கோவை திரும்பி போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிக்கலாம் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...