ஆனைமலை தென்னை நாற்றுப்பண்ணையில் தென்னங்கன்றுகள் விற்பனை - தோட்டக்கலைத் துறை அறிவிப்பு

ஆனைமலை அருகே ஆழியாற்றில் உள்ள தோட்டக்கலைத் துறையின் தென்னை நாற்றுப்பண்ணையில் நெட்டை மற்றும் குட்டை ரக கலப்பின தென்னங்கன்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Coimbatore: ஆனைமலை அருகே உள்ள தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் தென்னை நாற்றுப் பண்ணையில் தென்னங்கன்றுகள் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, ஆனைமலை அருகே ஆழியாற்றில் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் கீழ் இயங்கும் தென்னை நாற்றுப்பண்ணையில் வளர்க்கப்படும் நெட்டை, குட்டை ரக கலப்பின நாற்றுகள் தற்போது விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.

விற்பனை விலை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ள அவர், நெட்டை ரக கன்றுகள் ஒன்று ரூ.65க்கும், கலப்பின ரக கன்றுகள் ஒன்று ரூ.125க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். தென்னங்கன்றுகள் வாங்க விரும்பும் விவசாயிகள் தங்களது சிட்டா மற்றும் ஆதார் அட்டையுடன் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு ஆனைமலை தோட்டக்கலை துறை அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம் என உதவி இயக்குனர் கோபிநாத் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...