கோவை கொடிசியாவில் ஹிப் ஹாப் இசை நிகழ்ச்சியின் போது மாணவர்களிடையே மோதல்

கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற ஹிப் ஹாப் தமிழா இசை நிகழ்ச்சியின் போது, போதையில் இருந்த கல்லூரி மாணவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் தலையிட்டு சம்பவத்தை கட்டுப்படுத்தினர்.



Coimbatore: கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஹிப் ஹாப் தமிழாவின் இசை நிகழ்ச்சியில் எதிர்பாராத சம்பவம் ஒன்று அரங்கேறியது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஹிப் ஹாப் தமிழா பாடல்களை பாடிக் கொண்டிருந்த போது, போதையில் இருந்த சில கல்லூரி மாணவர்களிடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கைகலப்பில் ஈடுபட்ட மாணவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.



இந்த சம்பவத்தின் போது அருகில் இருந்த சில பொதுமக்களுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், இந்த இசை நிகழ்ச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் குறைவாக இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர்.

பார்வையாளர்கள் சிலர் கருத்து தெரிவிக்கையில், இது போன்ற இசை நிகழ்ச்சிகளில் கல்லூரி மாணவர்கள் அதிகம் கூடுவதால் இது போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருவதாகவும், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் குறிப்பிடத்தக்க அம்சமாக, வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளை போல 300 அடி நீளமுள்ள ரேம்ப் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. ஹிப் ஹாப் தமிழா இந்த ரேம்பில் நடந்து வந்து பாடல்களை பாடி நடனமாடியது பார்வையாளர்களை கவர்ந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...