உடுமலை நகராட்சியில் வளர்ச்சிப் பணிகளுக்கு டெண்டர் முறை பின்பற்றப்படவில்லை: நகர்மன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

உடுமலை நகராட்சியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளுக்கு டெண்டர் முறை பின்பற்றப்படவில்லை என்று நகர்மன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நகராட்சி கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அலுவலகத்தில் இன்று நகர மன்ற தலைவர் மத்தீன் தலைமையில் 23-வது சாதாரண கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகள் முறையாக செய்யப்படுவதில்லை என்றும், தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளதாகவும் உறுப்பினர்கள் தெரிவித்தனர். எஸ்.வி.புரம் செல்லும் பகுதியில் உள்ள தனியார் மதுபானக் கூடத்தை அகற்ற வேண்டும் என்றும், 27-வது வார்டில் உள்ள நெடுஞ்செழியன் காலனியில் விஷச் சந்துக்கள் நடமாட்டம் உள்ளதால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.



முன்னாள் நகராட்சி தலைவரும், தற்போதைய 33-வது வார்டு உறுப்பினருமான வேலுச்சாமி பேசுகையில், நகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளுக்கு நகர மன்ற உறுப்பினர்களுக்கு முறையாக அறிவிப்பு விடப்படுவதில்லை என்றும், ஒரே நபருக்கு டெண்டர் விடப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், நகராட்சி பகுதியில் உள்ள வணிக வளாகங்களில் உள்ள கடைகளின் வாடகை அதிகமாக உள்ளதால் அதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகள் முறையாக செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. நகராட்சி நிர்வாகம் இந்த பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...