அன்னூர் அருகே குடிநீர் குழாய் உடைப்பு: ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக ஓடியது

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கரியம்பாளையம் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி சாக்கடையில் கலந்தது. அதிகாரிகள் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.



Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து குடிநீர் எடுத்து குழாய்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரியம்பாளையம் பகுதியில் இருந்து பிள்ளையப்பன்பாளையம் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.

முதலில் சிறிய அளவில் இருந்த உடைப்பு, பின்னர் தண்ணீர் அழுத்தத்தால் பெரிதாகி, சுமார் 3 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் பீச்சி அடித்தது. இதன் காரணமாக பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி, சாலையோரங்களில் சென்று சாக்கடையில் கலந்து ஓடியது.



சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், பொதுமக்கள் உடனடியாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, குடிநீர் வினியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

தற்போது, குழாய் உடைப்பை சரி செய்வதற்கான நடவடிக்கைகளில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குழாய் உடைப்பு சரி செய்யப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் குடிநீர் வினியோகம் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...