உலக பிசியோதெரபி தினம்: மேட்டுப்பாளையம் முதியோர் இல்லத்தில் இலவச மருத்துவ முகாம்

உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு, ரிலீப் பிசியோ கிளினிக் மேட்டுப்பாளையத்தில் உள்ள விஸ்வநாத செட்டியார் முதியோர் இல்லத்தில் இலவச பிசியோதெரபி முகாமை நடத்தியது. 70 முதியோர்கள் பயனடைந்தனர்.


கோவை: உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு இன்று மேட்டுப்பாளையத்தில் உள்ள விஸ்வநாத செட்டியார் முதியோர் இல்லத்தில் ரிலீப் பிசியோ கிளினிக் சார்பில் இலவச பிசியோதெரபி முகாம் நடைபெற்றது.



இந்த முகாமில் ரிலீப் பிசியோ கிளினிக் மருத்துவர் கோகிலாஸ்ரீ தலைமையிலான மருத்துவக் குழுவினர் பங்கேற்று சிறப்பாக நடத்தினர். இந்த முகாமில் 70 முதியோர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



முகாமில் பங்கேற்ற முதியோர்களுக்கு கை, கால் வலி, மூட்டு வலி, கழுத்து வலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வலியில்லா நிவாரணம் மற்றும் எளிய பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதனால் பெரிதும் மகிழ்ச்சியடைந்த முதியோர்கள், ரிலீப் பிசியோ கிளினிக் மருத்துவர் கோகிலாஸ்ரீ, மருத்துவர் பெர்னாண்டஸ் பிராங்க்ளின் உள்ளிட்ட மருத்துவக் குழுவினருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்தனர்.

இந்த இலவச மருத்துவ முகாம் ஆதரவற்ற முதியோர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. இது போன்ற முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று முதியோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...