மூன்று மணி நேரத்தில் வழிப்பறி வழக்கை கண்டுபிடித்த தடாகம் போலீசார்: வெளி மாநில சிறுவன் கைது

கோவை தடாகம் பகுதியில் 64 வயது பெண்ணின் 10 பவுன் தாலிக்கொடி திருடப்பட்டது. போலீசார் மூன்று மணி நேரத்தில் வழக்கை முடித்து, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவனை கைது செய்தனர்.



கோவை: கோவை தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பன்னிமடை அருகே ஆர்.ஆர் அவென்யூ குடியிருப்பில் நடந்த வழிப்பறி சம்பவத்தை போலீசார் மூன்று மணி நேரத்தில் விரைந்து முடித்துள்ளனர்.

புதிதாக குடிவந்துள்ள சிவசங்கர் மற்றும் அவரது மனைவி பார்வதி (64) ஆகியோர் வீட்டு வேலைக்காக பீகாரைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்ற சிறுவனை வேலைக்கு அமர்த்தியிருந்தனர். நேற்று மாலை சுமார் 5:30 மணியளவில், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் பார்வதியின் கழுத்தில் இருந்த 10 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு சஞ்சய் குமார் தப்பியோடினார்.

உடனடியாக தடாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. விரைவான நடவடிக்கையின் மூலம், மூன்று மணி நேரத்திற்குள் சஞ்சய் குமாரை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட 10 பவுன் தாலிக்கொடியை மீட்டனர்.

இந்த சிறப்பான செயலுக்காக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் போலீஸ் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து, காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சில முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டன. பெயர் விலாசம் தெரியாத வெளி மாநில நபர்களை வேலைக்கு அமர்த்துவது ஆபத்தானது என்றும், அவ்வாறு அமர்த்தும் பட்சத்தில் அவர்களின் முறையான ஆவணங்களை பெற்று வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சுற்றுவட்டாரங்களில் கண்காணிப்புக்காக சி.சி.டி.வி கேமராக்களை பொருத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...