திமுக, திகவினால் ஆன்மீகத்தை அழிக்க முடியாது: மத்திய இணை அமைச்சர் எல். முருகன்

மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழகத்தில் ஆன்மீகத்தை அழிக்க திமுக, திகவினால் முடியாது எனக் கூறினார். தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் விமர்சித்தார்.



கோவை: மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் எல். முருகன், செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. தினமும் ஆறு கொலைகள் நடக்கும் அளவுக்கு மிக மோசமான நிலை தமிழகத்தில் உள்ளது. வீதி வீதியாக முக்குக்கு ஒரு டாஸ்மாக் கடை திறந்து மக்களை மதுவுக்கு அடிமையாக்கி வருகிறார்கள்."

"ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு கைது எதற்காக நடந்தது என்று அரசாங்கத்திற்கே தெரியவில்லை. ஆன்மீகம் என்றாலே திமுக அரசு கைது செய்கிறது. விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலைகள் வைக்க திமுக அரசு கடும் நெருக்கடி கொடுத்தது. அதனையும் தாண்டி இன்று மக்கள் எழுச்சியாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்று வருகிறது."

"தமிழகம் ஒரு ஆன்மீக பூமி. அதனை திகவும், திமுகவும் அழிக்க நினைத்தால் அது முடியாது," என்று எல். முருகன் தெரிவித்தார்.



முன்னதாக, மேட்டுப்பாளையத்தில் உள்ள பொன்விழா நகரில் அமைந்துள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகனின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனையடுத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பவானி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.

இந்நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல். முருகனுடன் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...