உடுமலையில் விநாயகர் சிலை ஊர்வலம்: இளம் பெண்கள் நடனமாடி உற்சாகம்

உடுமலையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 250 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இளம் பெண்கள் நடனமாடி உற்சாகம் அளித்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கடந்த 7-ம் தேதி 385 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.



இன்று இந்து அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 250 சிலைகள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து சிலைகளை மடத்துக்குளம் அமராவதி ஆற்றுக்கு கொண்டு சென்று கரைக்கும் நிகழ்வு இன்று மாலை 6 மணிக்கு தொடங்கியது.



விநாயகர் ஊர்வலத்தை பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி மற்றும் உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



இதையடுத்து செண்டை வாத்தியம் முழங்க வான வேடிக்கையுடன் இளம் பெண்கள் உற்சாக நடனத்துடன் கல்பனா சாலை, கச்சேரி வீதி, பெரிய கடை வீதி, பழனி ரோடு வழியாக ஊர்வலம் அமராவதி ஆற்றை நோக்கி சென்றது.

ஊர்வலத்தை யொட்டி உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு வெ.ஆறுமுகம் தலைமையிலான போலீசார் முன்னே செல்ல ஊர்வலம் அதைத் தொடர்ந்து சென்றது. ஊர்வலத்தை யொட்டி உடுமலை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...