கோவை துடியலூரில் 351 விநாயகர் சிலைகள் கரைப்பு; பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சர்ச்சை பேச்சு

கோவை துடியலூரில் 351 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. காவல்துறையில் இந்து விரோத சக்திகள் ஊடுருவியுள்ளதாக இந்து அமைப்புகள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டினார்.



Coimbatore: கோவை துடியலூர் சுற்றுப் பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 351 விநாயகர் சிலைகள் வெள்ளக்கிணர் பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட குட்டையில் கரைக்கப்பட்டன. இதற்கு முன்னதாக, இந்து முன்னணி சார்பாக விசர்ஜன ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உருவை பாலன் தலைமை தாங்கினார். நந்தகுமார், தியாகராஜன், ஜெய்கார்த்திக், முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா பேசும்போது, "தமிழ்நாட்டில் மத நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இருக்கின்ற ஆட்சியாளர்கள், பள்ளிக்கூடத்தில் பேசியதை கூட பெரிய அளவில் எடுத்துக் கொண்டு, அவரை கைது செய்வதற்கு 20க்கும் மேற்பட்ட போலீசாரை விமான நிலையத்திற்கு அனுப்பி வைப்பது ஒரு தவறான முன்னுதாரணமாகும்" என்றார்.



மேலும் அவர், "பிரதமரை பற்றி தவறாக பேசிய அமைச்சர் உட்பட பலர் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தந்தை பெரியார் தவறான வழிகாட்டுதலை தமிழ்நாட்டில் கொடுத்திருக்கிறார். போலீஸ் துறையில் பெரிய பொறுப்பில் இருக்கின்ற அதிகாரி கிறிஸ்தவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று சொல்லி வருகிறார். இந்து விரோத சக்திகள் காவல் துறையில் உள்ளே போயிருக்கிறதோ என்று தோன்றுகிறது" என்று குற்றம்சாட்டினார்.



எச்.ராஜா மேலும் கூறுகையில், "இந்த பகுதியில் 350க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருக்கிறது. அதை முறையாக அனுமதிக்காமல் அவர்களை காலம் கடத்தி அனுமதி வழங்குவது சட்டவிரோதமானது. திருச்சியில் ஒரு பகுதியில் பிற மதத்தை சேர்ந்தவர் கற்பழிப்பு சம்பவத்தில் கூட ஈடுபட்டிருந்தார். ஆனால் அதற்கு அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை" என்றார்.

இறுதியாக அவர், "பக்தி என்பது அனைவருக்கும் பொதுவானது. இந்து கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்க நெறிமுறைகள் இந்து மதத்தில் அதிகமாக உள்ளது. அதை அனைவரும் பின்பற்றி வாழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...