கோவை வெள்ளலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஸ்டெம் லேப் திறப்பு விழா: 'கோயம்புத்தூர் அறிவியல் தொழில்நுட்பத்தின் மையம்' - மாவட்ட ஆட்சியர்

கோவை வெள்ளலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜிடி நாயுடு அறக்கட்டளை சார்பில் ஸ்டெம் லேப் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கலந்துகொண்டு, கோயம்புத்தூர் அறிவியல் தொழில்நுட்பத்தின் மையமாக திகழ்வதாக பாராட்டினார்.



Coimbatore: கோவை மாவட்டம் வெள்ளலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜிடி நாயுடு அறக்கட்டளை சார்பில் நிறுவப்பட்டுள்ள ஸ்டெம் (STEM - Science Technology Engineering Mathematics) லேப் திறப்பு விழா செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டார்.

விழாவில் ஜிடி நாயுடு அறக்கட்டளையின் அறங்காவலர் அகிலா சண்முகம், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலக அதிகாரிகள், வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.



மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தனது உரையில், "கோயம்புத்தூர் மாவட்டம் அறிவியல் தொழில்நுட்பத்திற்கான மையமாக திகழ்கிறது. ஜிடி நாயுடு பல்வேறு கண்டுபிடிப்புகள் மூலம் சாதனை படைத்துள்ளார். புத்தகப் படிப்பையும் தாண்டி நேரடி சோதனை முயற்சிகள் செய்வதன் மூலம் புதுவித அனுபவத்தை பெறலாம்," என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும், "முதலாவது லேப் அரசூர் பள்ளியில் தொடங்கப்பட்டது மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது வெள்ளலூர் பள்ளியில் நிறுவப்பட்டுள்ள ஸ்டெம் லேப் மாணவர்களை உத்வேகப்படுத்தி, பெரும்பாலான மாணவர்களை அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுகள் நோக்கி நகர்த்தும்," என்று நம்பிக்கை தெரிவித்தார்.



பின்னர், மாவட்ட ஆட்சியர் பள்ளியில் நிறுவப்பட்டுள்ள ஸ்டெம் லேபை திறந்து வைத்து பார்வையிட்டார். லேபில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து கேட்டறிந்த அவர், ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி மாணவிகள் செய்து காட்டிய அறிவியல் செயல்முறை விளக்கங்களையும் கவனமாக பார்வையிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...